ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
- கபடி பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 28 தங்கம் வென்றுள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி 26-24 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
ஆசிய விளையாட்டின் செஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளது.
மல்யுத்தத்தில் ஆண்களுக்கான ப்ரீஸ்டைல் 86 கிலோ எடை பிரிவில் இந்தியா- ஈரான் மோதின. இதில், ஈரான் வீரரான ஹாசன் யஸ்தனிசராட்டி 10-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப்பெற்றார். இதன்மூலம் ஈரான் தங்கம் வென்றது. இந்திய வீரர் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டில் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே ஆட்டம் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்து இருந்தபோது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், இந்திய அணிக்கு தங்கமும், ஆப்கானிஸ்தான் அணி வெள்ளி பதக்கமும் வென்றுள்ளது.
பெண்கள் ஹாக்கி:
நடப்பு சாம்பியன் ஜப்பானை 2-1 என்ற அடிப்படையில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி.
ஆண்கள் கபடி:
ஆண்களுக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்தியா- ஈரான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈரானை 33-29 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியா வென்றுள்ளது.
இதன்மூலம், இந்நதிய அணி கபடி போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் தங்கம் வென்றுள்ளது.
ஆண்கள் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா- ஈரான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
பேட்மிண்டனில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா- கொரியா மோதின. இதில், கொரியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.
கேனோ ஸ்லாலோம் ஆண்கள் கயாக் இறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் கேவட் 7ம் இடம் பிடித்து தோல்வி அடைந்தார்.
ஆப்கானிஸ்தான் 5வது விக்கெட்டை வீழ்த்தினார் ஷாபாஸ் அகமது.