விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டி - குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றது இந்தியா
- ஸ்குவாஷ் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியா வெண்கலம் வென்றது.
- இந்திய அணி இதுவரை 31 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, சீனா தைபே வீராங்கனையிடம் தோற்று வெண்கலம் வென்றார்.
இதுவரை இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 73 பதக்கங்களைப் பெற்றுள்ளது.