புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-குஜராத் அணிகள் இன்று மோதல்
- குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது.
- குஜராத் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.
ஐதராபாத்:
11- வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
சென்னையை தலைமையிடமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 1 டை, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 3- வது இடத்தில் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 44-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்சையும், 2-வது போட்டியில் 35-30 என்ற கணக்கில் புனேயையும் வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 40-42 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னாவிடம் தோற்றது. 4-வது போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சுடன் 30-30 என்ற கணக்கில் டை செய்தது.
தமிழ் தலைவாஸ் 5- வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்சை இன்று இரவு 8 மணிக்கு எதிர் கொள்கிறது. குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் இருக்கிறது.
குஜராத் அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது.
இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் உ.பி-யோதாஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.
உ.பி. அணி 16 புள்ளியு டன் (3 வெற்றி, 1 தோல்வி) 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அரியானா 10 புள்ளியுடன் (2 வெற்றி, 1 தோல்வி) 8-வது இடத்தில் இருக்கிறது. 3-வது வெற்றிக்காக அந்த அணி காத்திருக்கிறது.
நடப்பு சாம்பியனான புனேரி பல்தான் 19 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.