செய்திகள் (Tamil News)

திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டில் 50 பவுன் நகை - ரூ.1 லட்சம் பணம் கொள்ளை

Published On 2016-07-07 04:14 GMT   |   Update On 2016-07-07 04:14 GMT
திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சித்தரேவு:

திண்டுக்கல் அருகே பைனான்சியர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி போலீஸ் சரகம் சித்தையன்கோட்டையை சேர்ந்தவர் முகமது கான் (வயது 42). வட்டி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகமதா பேகம் கடந்த 6 மாததுக்கு முன்பு இறந்து போனார். எனவே அவர் தனது மகன், மகளும்டன்அருகில் உள்ள தனது அண்ணன் நைனாமுகமது வீட்டில் இரவு நேரத்தில் தூங்குவது வழக்கம்.

அதன்படி நேற்று இரவு தனது குழந்தைகளுடன் முகமது காசிம் அண்ணன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் பக்கத்து வீடு மாடி வழியாக ஏறி குதித்தனர். பின்னர் முகமது கான்வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை ரம்ஜான் தொழுகைக்கு செல்லவீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டப்பட்டு இருந்தது. கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்து போது கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைபார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது கண்டு திடுக்கிட்டார். இதனை கொள்ளையர்கள் சுருட்டிகொண்டு மாடி வழியாக ஏறி குதித்து தப்பி உள்ளனர்.

ரம்ஜான் நாளில் இப்படி கொள்ளை போய்விட்டதே என முகமது கான் புலம்பினார். இதுகுறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் முகமதுகான் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி நின்று கொண்டது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News