செய்திகள் (Tamil News)

திருச்சியில் அதிகாரியை முற்றுகையிட்ட சம்பவம்: ரெயில்வே ஊழியர்கள் 11 பேர் பணியிடை நீக்கம்

Published On 2016-10-08 03:05 GMT   |   Update On 2016-10-08 03:05 GMT
திருச்சியில் கோட்ட முதுநிலை வணிக மேலாளரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் ரெயில்வே ஊழியர்கள் 11 பேரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
திருச்சி:

திருச்சி கோட்ட ரெயில்வே முதுநிலை வணிக மேலாளராக பணியாற்றி வருபவர் அருண் தாமஸ் கலாதிகல். இவர் கடந்த 5-ந்தேதி பணியில் இருந்தபோது எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சிலர் திரண்டு சென்று பல்வேறு கோரிக்கை தொடர்பாக அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் உதவி கோட்ட செயலாளரும், பார்சல் அலுவலக முதன்மை கிளார்க்குமான ஜான்சன், முன்பதிவு மைய மேற்பார்வையாளர் சையது தாஜூதின் அஸ்லாம், டிக்கெட் பரிசோதகர் தாமரைசெல்வன், முதன்மை டிக்கெட் பரிசோதகர் ஜெயச்சந்திரன் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து முதன்மை வணிக மேலாளர் அஜித்சக்சேனா நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதேபோல திருச்சி குட்ஷெட் யார்டு கிளார்க் ராஜா, என்ஜினீயர் ராவணதாசன், எலக்ட்ரிக்கல் பிரிவு ஊழியர் நாகராஜ், மெக்கானிக்கல் பிரிவு ஊழியர் மார்ட்டின், டிக்கெட் பரிசோதகர்கள் முகமது சபி, கவுசிகன், பொன்மலை ரெயில்வே மருத்துவமனை செவிலியர் சாந்திதங்கம் ஆகிய 7 பேரை பணியிடை நீக்கம் செய்து அந்தந்த பிரிவு அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.

Similar News