செய்திகள் (Tamil News)
திருவண்ணாமலை கோவிலில் கிடந்த பெண் குழந்தையை படத்தில் காணலாம்.

கோவிலில் பெண் குழந்தை வீச்சு: பிறந்த 7 நாளில் விட்டுச்சென்ற தாய் யார்?

Published On 2017-04-01 06:16 GMT   |   Update On 2017-04-01 06:16 GMT
திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தை கோவில் மண்டபத்தில் விட்டுச்சென்ற தாய் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை கோவில் மண்டபத்தில் பிறந்து 7 நாளே ஆன பெண் குழந்தை அனாதையாக கிடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெரிய நந்தி அருகே கல்யாண சுந்தரேஸ்வரர் மண்டபம் உள்ளது.

இங்கு இன்று காலை 7.30 மணி அளவில் பிறந்து 7 நாளே ஆன பெண் குழந்தை அழுதபடி கிடந்தது. இதை பார்த்த கோவில் பணியாளர் இது பற்றி கோவில் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

அவர்கள் வந்து பார்த்தனர். அப்போது குழந்தையின் அருகில் அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிறந்தால் கொடுக்கப்படும் அம்மா பெட்டகம் கிடந்தது.

எனவே இந்த குழந்தை ஏதாவது ஒரு அரசு ஆஸ்பத்திரியில்தான் பிறந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை கோவில் மண்டபத்தில் விட்டுச்சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.



Similar News