செய்திகள் (Tamil News)
வேலூர் கோர்ட்டில் ஆஜராக வந்த ராவணன்.

ரூ.1 கோடி மோசடி வழக்கு: சசிகலா உறவினர் ராவணன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்

Published On 2017-04-17 11:02 GMT   |   Update On 2017-04-17 11:02 GMT
மணல் குவாரி உரிமம் மோசடி வழக்கில் சசிகலா உறவினரான ராவணன், வேலூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.
வேலூர்:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினரும், அ.தி.மு.க.வில் இருந்து முன்பு நீக்கப்பட்டவருமான ராவணன் மீது ஆட் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

வேலூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான ஜி.ஜி.ரவியிடம் கடந்த 2011-ம் ஆண்டு மணல் குவாரிக்கு உரிமம் பெற்று தருவதாக கூறி ரூ.1 கோடியை வாங்கிக் கொண்டு ராவணன் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்த புவனேசன் என்பவரிடம் இருந்தும் மணல் குவாரிக்கு உரிமம் தருவதாக சொல்லி ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கும் ராவணன் மீது பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவியிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கு விசாரணை சம்பந்தமாக ராவணன், வேலூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

ராவணன் மீது வழக்கு தொடர்ந்த ஜி.ஜி.ரவி கடந்த 2 மாதத்துக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Similar News