செய்திகள் (Tamil News)

காட்டுமன்னார்கோவில் அருகே ஐம்பொன்சாமி சிலையை கொள்ளையடித்த வாலிபர் கைது

Published On 2017-04-27 05:26 GMT   |   Update On 2017-04-27 05:26 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே ஐம்பொன்சாமி சிலையை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குமராட்சி அருகே கீழபருத்துக்குடியில் புகழ்பெற்ற உத்திராபதீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமனிதர்கள் இந்த கோவிலுக்குள் புகுந்து ஐம்பொன்னாலான சாமி சிலையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தகொள்ளை குறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

வெள்ளூர் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார்.

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கீழாங்காடு பகுதியை சேர்ந்த வீரப்பாண்டியன்(36) என்பதும் உத்திராபதீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலையை திருடிய வெள்ளூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் புதைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த சிலையை போலீசார் மீட்டு வீரபாண்டியனை கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News