செய்திகள் (Tamil News)

சென்னை பேராசிரியையின் ரூ. 20 லட்சம் நிலம் அபகரிப்பு: 2 பேர் கைது

Published On 2017-10-06 10:53 GMT   |   Update On 2017-10-06 10:53 GMT
ஆள் மாறாட்டம் செய்து சென்னை பேராசிரியையின் ரூ. 20 லட்சம் நிலத்தை அபகரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா. அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

இவருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை பார்ப்பதற்காக பிரேமா வந்தார்.

அப்போது வேப்பம்பட்டை சேர்ந்த பச்சை முத்து, நடராசன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலமோசடியில் ஈடுபட்ட பச்சைமுத்து, நடராஜன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிலத்தின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி கூறும்போது, கடந்த 6 மாதங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் ரூ. 9 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Similar News