செய்திகள்

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-05-26 04:59 GMT   |   Update On 2018-05-26 04:59 GMT
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:

பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை 100 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 294 கன அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 113.50 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1476 மி.கன அடியாக உள்ளது.

இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை, வருசநாடு, மூலவகையாறு உள்ளிட்ட கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் மதுரை மாநகர குடிநீருக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 37.11 அடியாக உள்ளது. வரத்து 60 கன அடி. திறப்பு 60 கன அடி. நீர் இருப்பு 736 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடி. வரத்து 15 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

பெரியாறு 15.8, தேக்கடி 18.4, கூடலூர் 17.2, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 8, சோத்துப்பாணை அணை 1.5, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News