செய்திகள்

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை- அமைச்சர் தங்கமணி

Published On 2018-06-08 08:11 GMT   |   Update On 2018-06-08 08:11 GMT
தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளதால் மின்வெட்டு எங்கும் இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி பேசுகையில், திருவொற்றியூரில் காலையில் இருந்து மதியம் வரை மின்சாரம் இல்லாமல் இருந்தது. சட்டசபை முடிந்து நான் சென்றபோது பொதுமக்கள் பலர் எனக்கு போன் செய்து மின்சாரம் எப்போது வரும் என்று கேட்டுக்கொண்டே இருந்தனர். அது எனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது என்றார்.

இதற்கு மின்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், “உங்களது ஆட்சியில் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. மின்வெட்டு எங்கும் இல்லை. மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு பள்ளம் தோண்டுவது, தொலைபேசி துறையினர் பள்ளம் தோண்டும் பிரச்சனையால் மின் கேபிள்கள் துண்டிக்கப்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. அதை கண்டுபிடித்து சரி செய்வதற்கு நேரம் ஆவதால் மின்சார விநியோகம் செய்ய சிறிது நேரம் ஆகிறதே தவிர எங்கும் மின்வெட்டு இல்லை” என்றார். #TNAssembly

Tags:    

Similar News