செய்திகள்

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

Published On 2018-07-10 10:01 GMT   |   Update On 2018-07-10 10:01 GMT
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் மற்றும் நாட்டு படகை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் கடலோர காவல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனையடுத்து மண்டபம் கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று கடலோர பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

உச்சிப்புளி தோப்பு வலசை பகுதியில் அவர்கள் சென்றபோது ஒரு நாட்டுப்படகில் இருந்து சிலர் கடலில் குதித்து தப்பினர்.

இதனை தொடர்ந்து படகை சோதனை செய்த போது அதில் 58 மூடைகளில் 600 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து நாட்டு படகையும், கடல் அட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனை கடத்த முயன்றவர்கள் யார்? தப்பி ஓடியது யார்? என தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

கடந்த சில மாதங்களாக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார்வளைகுடர் கடல் பிராந்தியங்கள் வழியாக ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள், போதைப் பொருட்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பையும் மீறி இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News