செய்திகள்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட விபத்தில் 7 பேர் பலி

Published On 2019-01-01 05:40 GMT   |   Update On 2019-01-01 05:40 GMT
சென்னையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அம்பத்தூர்:

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் போலீசார் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டும் தேவை யான முன்னேற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். மது போதையில் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத் தில் சென்று பைக் ரேசில் ஈடு படுபவர்களை கட்டுப்படுத் துவதற்காக முக்கிய சாலை களில் தடுப்புகளும் அமைக் கப்பட்டிருந்தன.

100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது. இருப்பினும் இதையும் மீறி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெற்குன்றம் நியூ காலனி பெருமாள் கோவில் தெரு வைச் சேர்ந்தவர் நர சிம்மன் (40). போர்வெல் மெக்கானிக். இவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்த போது அந்த வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நரசிம்மன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த நர சிம்மன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி மேம்பாலத்தில் பாலத்தின் நடுவே உள்ள தடுப்பில் மோதி அபிலேஷ் என்ற வாலிபர் பலியானார். தண்டையார்பேட்டையை சேர்ந்த இவருக்கு திருமணம் ஆகி இன்னும் ஒராண்டு கூட முடியவில்லை.

புத்தாண்டு கொண்டாடி விட்டு திரும்பிய போது நள்ளிரவு 12.30 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இதேபோல் கொரட்டூரில் பிஞ்சிஸ்படேல், வினோத், தரமணியில் பாஸ்கர், கோடம்பாக்கத்தில் ஜெய சுதன், வேளச்சேரியில் புருஷோத்தமன் ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

120-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

Tags:    

Similar News