செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி - கலெக்டர் பரிசு வழங்கினார்

Published On 2019-01-28 05:37 GMT   |   Update On 2019-01-28 06:18 GMT
திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் நடந்த பயிர் விளைச்சல் போட்டியில் மேல்பென்னாத்தூரை சேர்ந்த விவசாயி முதல் பரிசு பெற்றார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான விவசாயிகளுக்கு விதைகள் வழங்கி அவர்கள் அறுவடை செய்த விளைச்சல்கள் கணக்கிடப்பட்டன.

இதில் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூரை சேர்ந்த சின்னத்தம்பி கலந்து கொண்டார். தனது நிலத்தில் 1 ஏக்கரில் பரிந்துரை செய்திருந்த டி.எம்.வி.13 என்ற ரக விதையை கொண்டு நிலக்கடலையை பயிரிட்டிருந்தார்.

வழக்கமாக 1 ஏக்கரில் 20 மூட்டைகள் மட்டுமே மகசூல் பெற முடியும் என்ற நிலையில் சின்னத்தம்பி 30 மூட்டை நிலக்கடலை சாகுபடி செய்து சாதனை படைத்தார். பயிர் விளைச்சல் போட்டியில் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

விவசாயி சின்னத்தம்பிக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரொக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.

அப்போது வேளாண்மை இணை இயக்குநர் செல்வசேகரன், செங்கம் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News