செய்திகள்
டிரம்களை படகாக பயன்படுத்தி மழை வெள்ளத்தை கடந்து வரும் மக்கள்

மாங்காட்டில் குடியிருப்பை சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளம்- ‘டிரம்’மில் அமர்ந்து வெளியே வரும் மக்கள்

Published On 2021-11-09 09:19 GMT   |   Update On 2021-11-09 09:19 GMT
அப்பகுதி மக்கள் கூறும்போது, “பலத்த மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது. அந்த நேரத்திற்கு வரும் அதிகாரிகள் அதன்பிறகு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கண்டு கொள்வதில்லை.

பூந்தமல்லி:

சென்னை புறநகர் பகுதியான மாங்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜனனி நகர் பகுதியில் பலத்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் இங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற பெரிய ‘டிரம்’களை ஒன்றாக கட்டி அதில் அமர்ந்து வெளியேறி வருகிறார்கள். படகாக அந்த பெரிய டிரம்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அதில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “பலத்த மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதி வெள்ளத்தால் சூழப்படுகிறது. அந்த நேரத்திற்கு வரும் அதிகாரிகள் அதன்பிறகு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை கண்டு கொள்வதில்லை. எனவே இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றனர்.

தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் குடியிருந்த ஏராளமானோர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கிறார்கள்.

அங்கு வசித்து வருபவர்களும் மழை நீர் வெள்ளத்தை நினைத்து அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News