செய்திகள்
ஆற்று பாலம் உடைந்து தண்ணீர்

சொர்ணமுகி ஆற்று பாலம் உடைந்தது: கும்மிடிப்பூண்டியில் 10 மணி நேரம் போக்குவரத்து முடங்கியது

Published On 2021-11-21 12:15 GMT   |   Update On 2021-11-21 12:15 GMT
கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.


ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லூரில் உள்ள சொர்ணமுகி ஆற்றின் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டி முதல் எளாவூர் சோதனைச் சாவடி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. வாகன போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் கவரப்பேட்டை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News