தமிழ்நாடு (Tamil Nadu)
தனது முதல் வாக்கினை பதிவு செய்த இளம் வாக்காளர்கள்

முதன்முதலாக ஓட்டுபோட்டது புதிய அனுபவம்-இளம் வாக்காளர்கள் உற்சாகம்

Published On 2022-02-19 10:01 GMT   |   Update On 2022-02-19 10:01 GMT
தமிழகம் முழுவதும் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் இளம் வாக்காளர்கள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர்.
சேலம்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பி முதன் முதலாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வாக்களித்த இளம் வாக்காளர்கள் அதிகம்பேர் உள்ளனர்.

அவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வந்து தனது வாக்கினை அளித்தனர். முதன்முதலாக வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்றும், என் வாக்கு...என் உரிமை என்ற அடிப்படையில் ஜனநாயக கடமை ஆற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் அவர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.  

எடப்பாடி நகராட்சி பகுதியில் முதல் வாக்குப் பதிவை பதிவு செய்த இளம் வாக்காளர் பவித்ரா கூறுகையில், வாக்குச்சாவடிக்குள் முதன் முறையாக சென்று எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். இதன் மூலம் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

நாமக்கல் செட்டிகுளத் தெருவைச் சேர்ந்தவர் காயத்ரி கல்லூரியில் இளங்கலை கணிதம் மூன்றாம் ஆண்டு பயில்கிறார். உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக தனது முதல் வாக்கினை கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பதிவு செய்தார். அவர் கூறுகையில், முதல் முறையாக வாக்க ளித்தது. ஜனநாயக கடமை ஆற்றிய பொறுப் பேற்றதாக உணர்கின்றேன்.
 
தேர்தலில் பெற்றோர்கள், உடனிருந் தவர்கள் புது வாக்காளர் களுக்கு உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் குறித்து எடுத்து கூறவேண்டும். வெற்றி பெறுபவர்கள் ஓட்டுக்காக மட்டும் வீட்டிற்கு வந்து நிற்காமல் மற்ற நாட்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முயலவேண்டும். 

தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு பணம் கொடுப்பதை அரசு தடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வாக்கு பணம் அளிப்பதையும், பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

லக்க்ஷிகா : திருச்செங்கோடு தொண்டிகரடு  பகுதியைச் சேர்ந்த லக்‌ஷிகா(19) திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் முதல் முறையாக வாக்களித்தார் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வரும் இவர் கூறுகையில்,  நான் முதல்முறை வாக்களிப்பது எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது. எங்களது பகுதியின் முன்னேற்றத்திற்கு பணி செய்பவருக்கு வாக்களித்தேன் என்றார்.

சென்னையில்  பேசன் டெக்னாலஜி படிக்கும் மாணவி ரேயா(18) கூறுகையில், நேர்மையான முறையில் அரசியல் செய்பவர்களுக்கு எனது வாக்கு.  இந்திய நாட்டின் முதுகெலும்பு உள்ளாட்சி அமைப்புகள். அது பலமாக இருந்தால் தான் நாடு வளர்ச்சி பெறும். முதன் முதலாக நான் உள்ளாட்சி தேர்தலில் வக்களிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Similar News