தமிழ்நாடு

சுதந்திர தின விழா: அனைவருக்குமான இந்தியாவுக்காக நாம் பணியாற்றி வருகிறோம் - மு.க. ஸ்டாலின் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-08-15 03:16 GMT   |   Update On 2024-08-15 04:55 GMT
  • சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றினார்.
  • சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை நடத்த பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகத்துக்கு எதிரே முக்கிய விருந்தினர்கள், பார்வையாளர்கள் அமர பந்தல்கள் போடப்பட்டுள்ளன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடி மரம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை தேசியக்கொடியை ஏற்றி வைப்பார். அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை நிகழ்த்துவார்.

அதன் பின்னர் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்படும். அவற்றை உரியவர்களுக்கு கோட்டை கொத்தளத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார்.

2024-08-15 04:26 GMT

காலை உணவுத்திட்டத்துக்காக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

2024-08-15 04:26 GMT

உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணனுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

2024-08-15 04:26 GMT

முதல்வரின் முகவரி துறையின் தலைமை தொழில்நுட்ப அலுவலரான வனிதாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

2024-08-15 04:23 GMT

அரசுத்துறைகளில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை செயல்படுத்திய 9 பேருக்கு நல்லாளுமை விருதுகள் வழங்கப்படுகிறது.

2024-08-15 04:13 GMT

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய செவிலியர் சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2024-08-15 04:11 GMT

இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேலுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. 

2024-08-15 04:10 GMT

சுதந்திர தினத்தை ஒட்டி மூத்த தமிழறிஞர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது. இத்துடன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

2024-08-15 04:08 GMT

நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை பேரிடர்களை தடுக்க ஆய்வு செய்ய முடிவு. எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து பல்துறை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்யும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 

2024-08-15 04:06 GMT

கட்டபொம்மன், வ.உ.சி. மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படுகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2024-08-15 04:03 GMT

ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Tags:    

Similar News