ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் கைது: கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தகவல்
- கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதனையடுத்து வழியால் துடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குற்கு முன்பாகவே உயிரிழந்தார்.
ஆம்ஸ்டராங்கை வெட்டிக் கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கொலையின் உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்தாண்டு நடந்த ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.