அண்ணா நினைவு நாள்: நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை
- பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது.
- தமிழகம் முழுவதும் அண்ணா சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலை மற்றும் உருவபடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.15 மணி அளவில் அண்ணாவின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவைதலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, தங்கமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார், ரமணா, மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, மாதவரம் மூர்த்தி, வி.என்.ரவி, ஆதிராஜாராம், கே.பிரபாகரன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணைச் செயலாளர் இ.சி.சேகர்,கொள்கைபரப்பு துணை செயலாளர் கலைப்புனிதன், வக்கீல் சதாசிவம், வக்கீல் அ.பழனி, வடபழனி சத்திய நாராயண மூர்த்தி, இஸ்மாயில் கனி மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.