தமிழ்நாடு
தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்
- கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம்.
பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதற்கட்டமாக தொடங்கிய நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளளது. 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவை தேர்தல், ஜூன் 1ம் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.
இதைதொடர்ந்து, ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்களை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை உள்பட 16 தொகுதிகளுக்கு தலா 2 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் 3 பேர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
39 தொகுதிகளுக்கு 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.