தமிழ்நாடு
த.வெ.க முதல் மாநாடு- தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்
- தவெக முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
- தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தொகுதி அளவில் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்களுடன் தற்காலிக பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.