தமிழ்நாடு

அய்யா அவதார தினத்தையொட்டி திருச்செந்தூர்-திருவனந்தபுரத்தில் இருந்து நாளை வாகன பேரணி

Published On 2023-03-02 06:49 GMT   |   Update On 2023-03-02 06:49 GMT
  • அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் நடக்கிறது.
  • ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது.

தென்தாமரைகுளம்:

அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை மறுநாள் (4-ந்தேதி) நடக்கிறது.

அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்திய தினமான நாளை (3-ந்தேதி) காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர் பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி, கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. அதேபோல் நாளை காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி தொடங்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார்கள்.

இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார்.

நாகராஜா திடலில் நாளை இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார்.

வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை மறுநாள் (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது.

இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடைகிறது. ஊர்வலத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமை பதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

Tags:    

Similar News