தமிழ்நாடு
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழகம் வந்தடைந்தது
- நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
- கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடகாவில் கபினி அணையிலிருந்து இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வந்தடைந்தது.
காலை முதல் 4500 கன அடியாக வந்த நீர்வரத்து, தற்போது 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கபினி அணையிலிருந்து 20,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,260 கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையிலிருந்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்பட்டது.