தமிழ்நாடு
வரும் 30-ம் தேதி அன்று மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.
- காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.
மகாத்மா காந்தி நினைவு நாள் அன்று வரும் 30ம் தேதி மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு அனைத்து மதத்தினருக்கும் மரியாதை கொடுத்தவர் காந்தி.
ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை, அதனாலேயே அவர் பலியானார்.
தேச தந்தை காந்தியை, பொய்களாலும், அவதூறுகளாலும் கொச்சைப்படுத்துகிறார்கள்.
காந்தியால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பது வன்மம் கலந்த நோக்கம்.
காந்தி பிறந்தநாளை சுவிட்ச்பாரத் என அழித்தல் வேலை ஆரம்பமானது.
அக்டோபர் 2ல் ஊர்வலம் நடத்தி திசைதிருப்ப முயற்சித்த ஆர்.எஸ்.எஸ் முயற்சியை தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.