தமிழ்நாடு

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன்வழி மதிப்பீடு தேர்வு- வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

Published On 2023-08-25 09:02 GMT   |   Update On 2023-08-25 09:02 GMT
  • மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை தேர்வு.
  • வினாத்தாள்கள் முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களது கற்றல் திறனை அறிந்துகொள்வதற்கு மாதம் ஒருமுறை திறன்வழி மதிப்பீட்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

மேலும், தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கு முந்தையநாள் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News