மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
- பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- எடப்பாடி பழனிசாமி பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் கடந்த 19-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ஆலயத்தின் புற்று மண்டபத்தில் சித்தர் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு கடந்த 9 நாட்களாக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு மேல்மருவத்தூருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வந்தார். அதன் பின்னர் கோயிலின் எதிரே உள்ள ஓம் சக்தி பீடத்தை வணங்கி கோயிலுக்கு உள்ளே சென்று ஆதிபராசக்தி அம்மனை வணங்கினார். பின்னர் கோயிலின் அருகே உள்ள புற்று மண்டபத்தில் பங்காரு அடிகளாரின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு அருகே உள்ள பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.