தமிழ்நாடு

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்... சவரன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது

Published On 2023-02-02 12:47 GMT   |   Update On 2023-02-02 18:19 GMT
  • பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தங்கம் விலை உயரத் தொடங்கியது.
  • சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாக உள்ளது

சென்னை:

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு சவரனுக்கு 600 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு சவரன் 43320 ரூபாயாக இருந்தது.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் வரும் காலங்களில் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 720 ரூபாய் வரை உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 44000-ஐ தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிற்பகல் நிலவரப்படி சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 5505 ரூபாயாகவும், ஒரு சவரன் 44 ஆயிரத்து 40 ரூபாயாகவும் விற்பனை ஆனது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 80 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய 80 காசுகளாக இருந்தது. பார் வெள்ளி (ஒரு கிலோ), ரூ.77800 ஆக இருந்தது.

Tags:    

Similar News