தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சம் வரை உயர வாய்ப்பு - ஜெயந்திலால் ஜலானி
- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை.
- நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளில் மக்கள் தங்க நகைகளை வாங்கி மகிழ்கின்றனர்.
இந்த ஆண்டு, அட்சய திருதியை நேற்று அதிகாலை 4.56 மணிக்கு தொடங்கி, இன்று (சனிக்கிழமை) மதியம் 2.50 மணியுடன் முடிவடைந்தது.
கடந்த ஆண்டு அட்சய திருதியை நாளில், ரூ.11 ஆயிரம் கோடி வரையில் தங்க நகைகள் விற்பனை இருந்தது. நடப்பாண்டு, விற்பனை அதிகரித்துள்ளதாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்சய திருதியை விற்பனை தொடர்பாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், " அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு 16 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஆகும்.
மேலும், 2030-ல் ஒரு சவரன் ஒரு லட்சம் வரை விற்பனையாக வாய்ப்புள்ளது" என்றார்.