தமிழ்நாடு

(கோப்பு படம்)

குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள்- டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியீடு

Published On 2022-07-15 14:47 GMT   |   Update On 2022-07-15 14:48 GMT
  • முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடைபெற்றது.
  • 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர்.

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது.

இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந் தேதிகளில் நடந்தது . இந்த நிலையில் 66 காலி பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 29-ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். அதன்படி இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிப்பட்டுள்ளது.

Tags:    

Similar News