தமிழ்நாடு

"கலைஞரின் கனவு இல்லம் திட்டம்" அடுத்தமாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டம்

Published On 2024-06-18 12:30 GMT   |   Update On 2024-06-18 14:04 GMT
  • கடந்த 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.
  • 1 லட்சம் வீடுகள் என கட்டித்தர தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 1975ஆம் ஆண் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற வகையில், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது, ஊரகப்பகுதிகளை குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிலையில் 2024-25 நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ. 3.10 லட்சம் என்ற அளவில் 1 லட்சம் வீடுகள் என கட்டித்தர தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.

ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ. 3.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தியுள்ளது

Tags:    

Similar News