தமிழ்நாடு

வி.ஏ.ஓ. முத்திரையை போலியாக தயாரித்து 10 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்த பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2023-07-22 06:18 GMT   |   Update On 2023-07-22 06:18 GMT
  • கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர்.
  • மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

சேலம்:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன்.

இவர்களுக்கு சொந்தமான நிலம் காடையாம்பட்டி பகுதியில் உள்ளது. இதில் கோவிந்தனின் சகோதரி மல்லிகா பாகமான 10 ஏக்கர் நிலத்தை கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் செல்வராஜ், பாலகிருஷ்ணன், மாணிக்கம், மகள் மணிமேகலை ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக தங்கள் பெயரில் மாற்றி கொண்டனர்.

மேலும் கோவிந்தன் மற்றும் அவரது மகன்கள் ஓமலூர் வட்டம் நடுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் நடராஜனின் கையெழுத்து, முத்திரையை வைத்து போலியாக அனுபவ சான்று தயாரித்து பத்திர பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மல்லிகாவின் மகன் முரளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகா 5 பேர் மீதும் போலி முத்திரை தயாரித்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடினர். அப்போது அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News