தமிழ்நாடு
பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
- பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
- பிரதமரின் தாயார் விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.