தமிழ்நாடு

அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள்

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது- 100 கிலோ வெடிமருந்து பறிமுதல்

Published On 2023-07-06 07:01 GMT   |   Update On 2023-07-06 07:01 GMT
  • அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.
  • வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் பட்டாசு வெடித்து ஒருவர் பலியானார்.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் திருவள்ளூரை அடுத்த பட்டறை பள்ளத்தெருவில் உள்ள வீட்டில் உரிமம் இன்றி பட்டாசு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா தலைமையில் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், வருவாய் துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பட்டறைபள்ளத் தெருவைச் சேர்ந்த சுகுமார்(41) என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தது தெரிந்தது. கோவில் திருவிழாவிற்காக அவர் பட்டாசு தயாரித்ததாக கூறி உள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.

வெடிமருந்துகளை பேரம்பாக்கம் அருகில் உள்ள கிடங்கில் வைக்க திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News