தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் முடிவு

Published On 2024-05-31 12:59 GMT   |   Update On 2024-05-31 12:59 GMT
  • சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.
  • பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி.

கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது.

சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கிறார்கள்.

இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

Tags:    

Similar News