தமிழ்நாடு

ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி

Published On 2024-01-20 08:05 GMT   |   Update On 2024-01-20 09:59 GMT
  • ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
  • கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.

திருச்சி:

ஆன்மிக சுற்றுப்பயணமாக 3 நாள் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் "கேலோ இந்தியா" போட்டியை தொடங்கி வைத்தார்.

இன்று திருச்சி சென்ற பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர், கருடாழ்வார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் தமிழில் பாடப்பட்ட கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு, பிரதமர் மோடி ரசித்தார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். ஹெலிபேட் தளத்தில் பிரதமர் மோடியை, அண்ணாமலை உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் பேய்க்கரும்பு அருகே 2 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 2.10 மணிக்கு ராமகிருஷ்ணா மடத்திற்கு வருகிறார்.

பின்னர் 2.45 மணிக்கு ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் மோடி, புனித தீர்த்தங்களில் நீராடி, பின் சாமி தரிசனம் செய்கிறார்.

* 3.30 முதல் 6.00 மணி வரை நடைபெறும் ராமாயண கதாபாத்திர நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

* 6.00 முதல் 6.30 மணி வரை கோவிலின் முக்கிய நிர்வாகிகளை பிரதமர் சந்திக்கிறார்.

* 7.25 மணிக்கு ராமகிருஷ்ண மடம் செல்லும் பிரதமர் அங்கு இரவு தங்குகிறார்.

Tags:    

Similar News