தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் பாறை கற்கள் விழுந்து விபத்து - 5 பேர் காயம்

Published On 2024-08-21 13:22 GMT   |   Update On 2024-08-21 13:22 GMT
  • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
  • தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் சில நாட்களாக தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பாறை கற்கள் உருண்டு விழுந்ததால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News