தமிழ்நாடு

8,850 மீட்டர் உயரத்தை 1 மாதத்தில் கடந்தார்- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சென்னை வாலிபர் சாதனை

Published On 2023-05-21 06:55 GMT   |   Update On 2023-05-21 07:18 GMT
  • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
  • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

சென்னை:

சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

Tags:    

Similar News