மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
- தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நிலவரம், மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.