தமிழ்நாடு

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது

Published On 2024-05-06 04:00 GMT   |   Update On 2024-05-06 05:27 GMT
  • பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
  • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் இந்த இணைய தளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதேபோல், பொறியியல் மாணவர் சேர்க்கை்கான ஆன்லைன் பதிவும் இன்று தொடங்குகிறது.

Tags:    

Similar News