தமிழ்நாடு

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி அதிரடியாக கைது

Published On 2023-11-03 08:32 GMT   |   Update On 2023-11-03 08:32 GMT
  • பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.
  • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நாமக்கல்:

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராகவும், விவசாய முன்னேற்ற கழக தலைவராகவும் இருப்பவர் செல்ல.ராசாமணி.

இவர் ஒருவந்தூர் நீரேற்று பாசன சங்க தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பதவி வகித்த காலக் கட்டத்தில் ஒருவந்தூர் வளாகத்தில் இருந்த 16 தேக்கு மரங்கள் வெட்டப்பட்டது.

இது தொடர்பாக கூட்டுறவு துறை சார்பாக அளித்த தகவலின்பேரில் வருவாய்துறை, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இந்த மரங்கள் முறைகேடாக வெட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போது பதவி வகித்து வந்த சங்க செயலாளர் பொன்னுசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்நிலையில் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என சங்க உறுப்பினர் நாச்சிமுத்து என்பவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தேக்கு மரங்களை வெட்டுவதற்கு சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும், முறையாக அனுமதி பெறாமல் வெட்டப்பட்டதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதன்பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று அதிரடியாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News