தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை

Published On 2023-01-30 10:45 GMT   |   Update On 2023-01-30 10:45 GMT
  • அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை.
  • அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News