தமிழ்நாடு

அமைச்சர் உதயநிதி வீட்டுக்கு 812 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவதா? அண்ணாமலை கண்டனம்

Published On 2023-11-27 06:28 GMT   |   Update On 2023-11-27 07:57 GMT
  • மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் இருந்து ஒரு துணை கமிஷனர், 2 உதவி கமிஷனர், 6 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 தனிப்படை போலீசார்.
  • அடையாறு காவல் மாவட்டத்தில் இருந்து 4 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள், 120 தனிப்படை போலீசார்.

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான இன்று அவரது வீடு, சுற்றுப்புறம், வீட்டுக்கு செல்லும் சாலைகளில் 812 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

2 துணை கமிஷனர்கள், 10 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 90 சப்-இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ் அதிகாரிகள், 380 தனிப்படை போலீசார் பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள்.

மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் இருந்து ஒரு துணை கமிஷனர், 2 உதவி கமிஷனர், 6 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 தனிப்படை போலீசார்.

அடையாறு காவல் மாவட்டத்தில் இருந்து 4 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 36 சப்-இன்ஸ்பெக்டர்கள், 120 தனிப்படை போலீசார்.

தி.நகர் மற்றும் பரங்கிமலை காவல் மாவட்டங்களில் இருந்து ஒரு துணை கமிஷனர், தலா 2 உதவி கமிஷனர்கள், தலா 6 இன்ஸ்பெக்டர்கள், தலா 18 சப்-இன்ஸ்பெக்டர்கள், தலா 60 தனிப்படையினர்.

இதுதவிர 380 ஆயுதப்படை போலீசாரை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள்.

மாநிலத்தில் அராஜகத்தை விலை கொடுத்து வாங்கும் வம்சத்தை மட்டும் காப்பதில் தங்கள் பொறுப்பு முடிந்துவிடாது என்பதை தமிழக அரசும், காவல்துறையும் உணர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News