தமிழ்நாடு (Tamil Nadu)

பச்சை பொய் கூறிய கலெக்டர்- அலட்சியம் காட்டிய அரசு: இ.பி.எஸ்.-ன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

Published On 2024-06-20 07:14 GMT   |   Update On 2024-06-20 07:14 GMT
  • சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.
  • திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* கள்ளச்சாராயத்தால் யாரும் சாகவில்லை என பச்சை பொய் கூறினார் கலெக்டர் ஷ்ரவன் குமார்.

* வயிற்று வலியால், வலிப்பால், வயது மூப்பால் உயிரிழப்பு ஏற்பட்டதாக பொய் கூறினார் கலெக்டர்.

* உண்மையை கூறாமல் திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையை செய்தார் கலெக்டர்.

* கள்ளச்சாராயம் பருகியவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கப்படவில்லை.

* சென்னையில் இருந்து ஏன் மருத்துவர்களை கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரவில்லை.

* திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் உயிர் பலியை குறைத்திருக்கலாம்.

* கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.10 லட்சம் நிவாரணம் என்பது தங்கள் உறவுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்கு போதாது. மேலும் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

Similar News