தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
- தங்கம் இன்று சவரன் ரூ 45 ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது.
- வட்டி விகித்தத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதால் விலை குறைந்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தங்கத்தின் விலை கடந்த மாதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. இம்மாதம் 5- ந்தேதி இதுவரை இல்லாத வகையில் சவரன் ரூ.45,520-ஆக அதிகரித்தது.
பின்னர் சற்று குறைந்து சவரன் ரூ.45,120-க்கு விற்பனை ஆனது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலையில் இன்று தங்கம் கிராம் ரூ.40-ம், சவரன் ரூ 320-ம் குறைந்து உள்ளது.
இன்று கிராம் ரூ.5,640-ல் இருந்து ரூ.5,600 ஆகவும், சவரன் ரூ. 45,120-ல் இருந்து ரூ.44,800 ஆக குறைந்து உள்ளது.
தங்கம் இன்று சவரன் ரூ 45 ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது. வட்டி விகித்தத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளதால் விலை குறைந்து இருப்பதாக தெரிகிறது.
வெள்ளி விலையும் சற்று குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.80.20-ல் இருந்து ரூ.80 ஆகவும், கிலோ ரூ.80 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ. 80 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.