தி.மு.க. பேச்சாளர் மீது கவர்னர் அவதூறு வழக்கு
- கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
- மனுவில், கிருஷ்ண மூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார். அப்போது, கவர்னர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாகவும் கொச்சையாகவும் பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து, கவர்னர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, கவர்னர் அலுவலக துணை செயலாளர் பிரசன்னா ராமசாமி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணைய வழியிலும், தபால் மூலமாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலாளர், தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு எதிராக, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கிருஷ்ண மூர்த்தியை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.