தமிழ்நாடு

சர்ச்சை வீடியோ பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

Published On 2023-03-18 04:50 GMT   |   Update On 2023-03-18 04:50 GMT
  • பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
  • வீடியோவில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் சிலை வைத்தது மற்றும் இடப்பிரச்சினை தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல யுடியூப்பரான சாட்டை துரைமுருகன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது யுடியூப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் குறிஞ்சாகுளத்தில் நிலவும் மோதலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக திருவேங்கடம் கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்டதாக திருவேங்கடம் போலீசார் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News