தமிழ்நாடு
போதை மறுவாழ்வு மையத்தில் வாலிபர் மரணம்: 3 பேர் சிறையில் அடைப்பு
- போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது.
- போதை மறுவாழ்வு மைய உரிமையாளர், கணக்காளர், பணியாளர் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆதம்பாத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் திடீரென உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, போதை மறுவாழ்வு மையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு அழிக்கப்பட்டிருந்தது. மேலும் போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார், கணக்காளர் க்ரூஸ், பணியாளர் அஜய் ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், போதைக்கு அடிமையான விஜயை கடுமையாக தாக்கியதன் காரணமாக உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் வினோத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.