தமிழ்நாடு

வானதி சீனிவாசன் - காயத்ரி ரகுராம்

காயத்ரிக்கு பா.ஜனதா மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் அறிவுரை

Published On 2023-01-14 09:34 GMT   |   Update On 2023-01-14 09:34 GMT
  • காயத்ரி கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி.
  • பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

நடிகை காயத்ரி ரகுராமுக்கும் பா.ஜனதா தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவர் கட்சியில் இருந்து விலகினார். இப்போது அவர் கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். காயத்ரியின் புகார்கள் குறித்து அகில இந்திய பா.ஜனதா மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

காயத்ரி, கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி, ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்பு ரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டு விட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்சினையை வெளியே கொண்டு வரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதை பார்க்க வேண்டும்.

பிரச்சினைகளை எப்படி லாவகமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News