தமிழ்நாடு (Tamil Nadu)

கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய் ஒரே போடு!

Published On 2024-10-27 15:36 GMT   |   Update On 2024-10-27 15:36 GMT
  • நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.
  • தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்கவில்லை.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

அதன்பின் பேசிய அவர், நம்மையும் நமது செயல்பாட்டையும் பார்த்து சில பேர் வரலாம் இல்லையா? அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அப்படி வருபவர்களை அரவணைக்க வேண்டும் இல்லையா? நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.

 

அதனால் நம்மை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசியுள்ளார்.

தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்காததால் அந்த கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் தவெக கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயம் சமீபத்தில் அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்தது.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் போர்க்கொடி தூக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு என விஜய் கூறியுள்ளது 2026 தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக அமையும். 

Tags:    

Similar News